கோவை மக்களின் தாகம் தீர்த்த நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்!!
Author: Udayachandran RadhaKrishnan1 May 2022, 8:39 pm
கோவை : நஞ்சுண்டாபுரம் பகுதி கழகம் சார்பாக துவங்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவையில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் வாயிலாக பொதுமக்களின் தாகம் தணித்து வருகின்றனர்.
அந்த வகையில்,கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி கழகம் சார்பாக நஞ்சுண்டாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. பகுதி கழக செயலாளர் சாரமேடு சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,தலைமை விருந்தினராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் தர்பூசணி, இளநீர், ஜூஸ், மோர் வழங்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், ஜெயராம் வார்டு செயலாளர்கள் குமரவேலு, முருகநாதன் மற்றும் வார்டு, பகுதி மாவட்ட கழகம் சார்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.