விஜய் கட்சி ஆரம்பிக்க காரணமே அவர்தான்.. புதிய புயலை கிளப்பிய முன்னாள் MLA விஜயதாரணி..!

Author: Vignesh
27 August 2024, 10:11 am

பாஜக தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதாரணி மூன்றுமுறை நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டு காலம் பதவியிலிருந்தும் இருக்கின்ற பதவியை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். பாஜகவில் இணைந்து ஆறு மாதமாகியும் இன்னும் எனக்கு பதவி கொடுக்கவில்லை.

எனக்கு நல்லது பண்ணுவீங்கன்னு தெரியும். பாஜக என்னைப் போன்றவர்களை நிச்சயம் பயன்படுத்தும் என்ன அண்ணே சரிதானே என விஜய் தாரணி அண்ணாமலையை பார்த்து கேட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இது மட்டும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜயதாரணி நடிகர் விஜய் ராகுல் காந்தியிடம் கட்சியில் தனக்கு பொறுப்பு கேட்டதாகவும், உங்கள் செல்வாக்குக்கு நீங்கள் தனி கட்சியே தொடங்கலாம் என ராகுல் காந்தி அட்வைஸ் கூறியதாகவும், அதனால் தான் விஜய் கட்சி ஆரம்பித்தார்.

இதனால், விஜய் காங்கிரஸ் கட்சியுடன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், பேசி இருந்தார். அவர் யாருடன் கூட்டணி அமைத்து யாரை எதிர்க்க போகிறார் என்பதை பொறுத்துதான் அரசியலில் மாற்றங்கள் வரும் என விஜயதரணி கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 198

    0

    0