ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய முன்னாள் ரயில்வே ஊழியர்.. ரயில் நிற்கும் முன்பே இறங்கியதால் விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 10:48 am

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (75) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு வண்டி மூலம் தாம்பரம் செல்வதற்காக வந்தார்.

பல்லவன் விரைவு வண்டி திருச்சி ரயில் நிலையத்தில் வந்து அடைந்த போது ரயில் நிற்பதற்கு முன்பாக ஏற மூயற்ச்சிதாக கூறப்படுகிறது.

அப்போது கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். அங்கு சரக்கு கையாளும் பகுதியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை ராமச்சந்திரன் அங்கிருந்து பயணிகள் உதவியுடன் உடனடியாக சிக்கி இருந்த அவரை அங்கிருந்து மீட்டார்.

அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் ஜெயச்சந்திரன் உயிர் தப்பினார். தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 310

    0

    0