கோவிலுக்கு வரும் பக்தர்களை மயக்கி விபச்சாரம் : தங்கும் விடுதியில் 8 அழகிகள்.. சமயபுரத்தில் நடந்த கூத்து..!
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆசை வார்த்தை கூறி விபசாரம் நடப்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி தனிப்படை போலீசார் நேற்று சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 4 தங்கும் விடுதிகளில் வெளியூரில் இருந்து பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தங்கும் விடுதி உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள நடுநிராவி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 67), புதுக்கோட்டை அருகே உள்ள கீழையூர் குடித்தெருவை சேர்ந்த சுதந்திரம் (49), அரியலூர் மாவட்டம், பெரிய பட்டக்காடு வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் (33), திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற தென்றல்அரசன் (24), மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூரை சேர்ந்த சிவராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் பெரம்பலூர் அருகே உள்ள பெரலி பகுதியை சேர்ந்த வேம்பு(38), ஈரோடு அருகே உள்ள பெரிய செம்பூர் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த நமச்சிவாயம்(51), சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த சீனிவாசன்(39), திருச்சி பொன்னேரிபுரம் முல்லை நகரை சேர்ந்த தமிழரசன் (39), ஸ்ரீரங்கம் முல்லையப்பா நகரைச் சேர்ந்த செல்வம் (38), சமயபுரம் சக்திநகரை சேர்ந்த கார்த்தி (38), தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (51) ஆகியோர் உள்பட மொத்தம் 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர் தனிப்படை போலீசார் அவர்களை சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி விடுதி உரிமையாளர்கள் 11 மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
விபச்சாரத்தில் பயன்படுத்திய 8 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபோன்று வெளியூர்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் தங்கும் விடுதிகள், அதன் உரிமையாளர்கள், நிர்வாகிகளை பற்றி விவரங்களை சேகரித்து வரும் போலீசார், அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.