நெருக்கமாக இருந்த காதலர்கள்.. கதவைத் தட்டியதும் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
22 November 2024, 3:03 pm

ஆந்திராவில் காதலனுடன் நெருக்கமாக இருந்த காதலியின் வீடியோவைக் காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வைசாக்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் சட்டக் கல்லூரியில் 20 வயது மாணவி படித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென அந்த மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்ய முயன்று உள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதனை தந்தை பார்த்ததால், அதிர்ச்சியடைந்து தனது மகளை காப்பாற்றி உள்ளார்.

பின்னர், தனது மகளிடம் விசாரித்த தந்தைக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. இதன்படி, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும், இந்த மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்துப் பேசிய நிலையில், ஒருமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து உள்ளனர்.

இதனை அந்த இளைஞர் தனது செல்போனில் மாணவிக்கு தெரியாதபடி வீடியோவாக எடுத்து உள்ளார். பின்னர், அந்த வீடியோவை தனது நண்பர்கள் மூன்று பேரிடம் இளைஞர் காண்பித்து உள்ளார். அதனைப் பார்த்த நண்பர்கள், தாங்களும் மாணவி உடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என இளைஞரிடம் கூறி உள்ளனர்.

Vizag gang rape case

அதற்கு அந்த இளைஞரும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியை விசாகப்பட்டினத்தில் இருக்கும் கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அந்த இளைஞர் அழைத்துச் சென்று உள்ளார். அங்கு முதலில் மாணவியும், இளைஞரும் உல்லாசமாக இருந்து உள்ளனர்.

இதையும் படிங்க: நயன்தாரா வீடியோ லீக்…படையெடுக்கும் ரசிகர்கள் ..!

இதனிடையே, இதனை இளைஞரின் நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர், திடீரென அறைக்கு உள்ளே இளைஞரின் நண்பர்கள் வந்து உள்ளனர். இதனால் அம்மாணவி அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, நான்கு பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

இந்த நிலையில் தான் மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, இது குறித்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞர் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 103

    0

    0