மனித உடல் உறுப்புகளை தருவதாக கூறி மாமிசத்தை கொடுத்து மோசடி : பல லட்சம் சுருட்டிய போலி பத்திரிகையாளர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 2:52 pm

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாந்திரீகம் செய்த மனித உடல் உறுப்புகள் என்று கூறி விலங்குகளின் உடல் உறுப்புகளை விற்பனை செய்து பணமோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது ஒருவர் தலைமறைவு போலீசார் வலைவீச்சு.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஸ்கார்பியோ TN 67AR 3641 வாகன சோதனை செய்யும் போது உள்ளே மனிதனுடைய உறுப்புகள் போன்று சில பாட்டில்களை அடைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கைப்பற்றினர்.

அந்த உறுப்புகளை சோதனை செய்ய மதுரையில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அங்கே சோதனை செய்யும் போது அது மனிதனின் உறுப்புகள் இல்லாத மாதிரி இருக்கிறது என்றும் மிருகங்களின் உறுப்புக்கள் போன்று தெரிகிறது என்று குறிப்பிட்டு உள்ளனர் இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பு இந்த உடல் உறுப்புகள் யாருடையது என்று தெரிவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து உடல் உறுப்புகளை விற்று பண மோசடி செயலில் ஈடுபட்ட உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் பாவா பக்ருதீன் தென்னஞ்சாலை பகுதியைச் சேர்ந்த பாண்டி ஆகிய மூன்று பேரை கைது செய்து உத்தமபாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு தனியார் மாத இதழில் மந்திரவாதி ஜேம்ஸ் மற்றும் பாவா பக்ருதீன் ஆகியோர் பணியாற்றுவது தெரிய வருகிறது. போலி பத்திரிகையாளர்கள் இது போன்ற குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் தேனி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் போலி பத்திரிகையாளர்கள் அடையாளம் கண்டு காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என தேனிமாவட்ட அனைத்து உண்மை பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி