தூத்துக்குடியில் இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்று டெலிகிராம்-ல் மெசேஜ் அனுப்பி அதன் மூலம் சுமார் 55,50,000/- பணம் மோசடி செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர்கள் கைது;
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் டெலிகிராம்- ல் (Telegram App) Online job மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற செய்தியை அனுப்பி அதில் அவர்கள் கூறிய L&T construction sites and buildings க்கு ரிவ்யூ (Review)கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்து சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் மேற்படி நபரை தொடர்ந்து தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி அவர், மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 55,49,916/- பணத்தை முதலீடு செய்துள்ளார்.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த மரம் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர்களான ஜேய் சவாலியா (24) மற்றும் மிலப் தக்கர் (22) ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 23.07.2024 அன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைத்து இரண்டு பேரையும் கைது செய்து சூரத் நகர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு Transit Warrant பெற்று பின்னர் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று (26.07.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து குஜராத் மாநிலம் சென்று கைது செய்த சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.