போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி.. வங்கி மேலாளரை தட்டி தூக்கிய போலீஸ்..!
Author: Vignesh23 August 2024, 12:51 pm
போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி. திருப்பூரைச் சேர்ந்த வங்கி மேலாளர் கார்த்திக் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கேரளா கண்ணூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் வங்கியில் நடந்த தணிக்கையின் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசில் வங்கி சார்பில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் மேலாளராக பணியாற்றிய கார்த்திக் 496 பவுன் நகையை எடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் 17 பேர் பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கி மேலாளர் கார்த்திக்கை கைது செய்த குற்ற பிரிவு போலீசார் நேற்று அவரை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்தனர். திருப்பூர் வங்கியில் அடகு வைத்திருந்த 496 பவுன் நகையையும் பறிமுதல் செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக திருப்பூரில் உள்ள தனியாரவங்கி மேலாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
0
0