பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரின் பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் SHOCK : மனைவியுடன் தில்லு முல்லு!
Author: Udayachandran RadhaKrishnan1 May 2024, 10:59 am
பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரின் பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் SHOCK : மனைவியுடன் தில்லு முல்லு!
வேலூர் ஓல்ட் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரஜினி இவர் வேலூர் காந்தி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில்) வீடு கட்டுவதற்கு கடனுதவி வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய நபர்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மற்றும் வட்டியை ரஜினி வசூல் செய்துள்ளார்.
அதில் 14 பேரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 13 லட்சத்து 12 ஆயிரத்து 884 ரூபாயை வசூலித்து அதனை நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லை
இந்த நிலையில் அந்த 14 பேரிடமும் 5 மாதத்திற்கான பணத்தை வட்டியுடன் செலுத்தும் படி அதே நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அப்பொழுது அவர்கள் அந்த பணத்தை ஏற்கனவே ரஜினி வசூல் செய்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து ஊழியர்கள் (முத்தூட் பைனான்ஸ்) நிதி நிறுவனம் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 3 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை : பதற்றத்தில் தலைநகரம்..!!
அதனை அடுத்து அவர் அங்குள்ள ஆவணங்களை சோதனை செய்த பொழுது 14 பேரிடமும் வசூலித்த பணத்தை ரஜினி செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது
இதுகுறித்து முத்தூட் பைனான்ஸ் நிறுவன மேலாளர் கிரண் குமார், வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார் .அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்
குற்றப்பிரிவு டிஎஸ்பி சாரதி மேற்பார்வையில் ஆய்வாளர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் 14 பேரிடமும் வசூலித்த ரூபாய் 13 லட்சத்து 12 ஆயிரத்து 884 ரூபாயை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் ரஜினி மோசடி செய்ததும் அதற்கு அவருடைய மனைவி பாக்கியலட்சுமி உடந்தையாக இருந்ததும் உறுதியானது.
இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்