GAY செயலியை பயன்படுத்தி மோசடி.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி வாலிபருக்கு நேர்ந்த கொடுமை : கோவையில் பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2023, 2:28 pm

கோவையில் ஓரினச்சேர்க்கை விரும்பிய வாலிபரிடம் வழிப்பறி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் Grinder app மூலம் தனது பெயரை பதிந்திருக்கின்றார்.

இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். கோவை சேர்ந்த அந்த வாலிபருக்கும் , செயலியில் அறிமுகமான ராக்கி என்ற வாலிபருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுகொண்ட அந்த 30 வயது வாலிபரை ராக்கி சந்திக்க கேட்டிருக்கின்றார். பின்னர் சரவணம்பட்டி அருகே ஆளில்லா கட்டிடத்திற்கு வரச் சொல்லி தனிமையில் இருட்டில் சந்திக்கலாமென தெரிவித்திருக்கின்றான்.

இதனை நம்பி வந்த அந்த அப்பாவி வாலிபரை நான்குபேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்திருக்கின்றனர். அப்போது அந்த நான்குபேரும் ஓரினச்சேர்க்கைக்காக வந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி, தங்க மோதிரம், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து தப்பித்திருக்கின்றனர்.

இதுகுறித்து ஏமாந்த நபர் சரவணம்பட்டி போலிஸில் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது ராக்கி என்ற பெயரில் செயலில் பேசிய நபர் போலி என்பது தெரியவந்தன.

ராக்கி என்ற பெயரில் அறிமுகமாக ஓரினச்சேர்க்கை போர்வையில் பணம் பொருளை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல் செய்த திட்டமிட்ட சதி என்பது போலிஸுக்கு தெரியவந்தன.

இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய போலிஸார் நான்கு பேரை கைது செய்திருக்கின்றனர். கார்த்திகேயன் (வயது 27) , மாரிச்செல்வம் (வயது 23) , அபிராம் (வயது 19) , ஹரி விஷ்ணு (வயது 21) உள்ளிட்டவர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நான்குபேரும் வழிப்பறி செய்த போன், நகை, பொருட்கள் சரவணம்பட்டி போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஓரினச்சேர்க்கைகாக வந்த நபரை கத்தியை காட்டி பணம் பறித்த வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இது போன்ற செயலியில் அறிமுகமாகும் நபர்கள் மீது ஆசைக்காட்டி மோசத்தை அரங்கேற்றுவது தொடர்கதையாகி வருகின்றன. எனவே வாலிபர்கள் உசாராக இருக்க போலிஸார் அறிவிறுத்தியிருக்கின்றனர்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!