செல்லூர் ராஜூ பெயரில் கோடிக்கணக்கில் மோசடி : பின்னணியில் கவுன்சிலர்.. மதுரையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
24 செப்டம்பர் 2024, 4:47 மணி
Sellur Raju
Quick Share

செல்லூர் ராஜூ பெயரை சொல்லி ₹6.80 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். என்.எஸ். ஆர்., ப்ளூ மெட்டல் என்ற பெயரில் கிரஷர் தொழில் செய்து வருகிறார்.

இவரது பேஸ்புக் நண்பர் மதுரை நேரு நகர் சங்கரி, அவ் வப்போது அரசியல் பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை பதிவிடுவார். அதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ படத்தை பார்த்து சரவணன் கேட்ட போது, அவரும். மனைவி ஜெயந்தியும் எனக்கு மிகவும் நெருக்கம். நான் சொன்னால் எந்த வேலை யாக இருந்தாலும் செய்து கொடுப்பார்கள் என்றார்.

இதை நம்பி தனக்கு விழுப்புரத்தில் மணல் குவாரி எடுக்க உதவுமாறு சரவணன் கேட்டார். 2020 மார்ச்சில் திண்டிவனம் வந்த சங்கரி மற்றும் அவரது கூட்டாளிகள் செல்வம், மகா, மாரி ஆகியோர் சந்தித்தினர்.

சங்கரி யாரிடமோ பேசி விட்டு சரவணனிடம் செல்லுார் ராஜூ பேசுவதாக கூறி கொடுத்தார். அதில் நபர், பேசிய ‘உறுதியாக குவாரியை எடுத்து தருகிறேன் என்றார். இரண்டு நாள் கழித்து பேசிய சங்கரி, முன்பணமாக ரூ.25 லட்சம் எடுத்துக்கொண்டு மதுரை வருமாறு கூறினார்.

2020 ஏப்ரலில் மதுரை வந்த சரவணன், சங்கரியை தேடிச் சென்றபோது அங்கு அவருடன் இருந்த மாயத்தேவன், செல்லூர் ராஜூவின் உறவினர் என அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் சரவணனை செல்லுார் ராஜூவின் வீட்டிற்கு அழைத்துச்செல்வது போல் அழைத்துச்சென்று ‘அவர் வீட்டில் இல்லை’ என நம்ப வைத்தனர்.

பின்னர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்தி என்றுக் கூறி போனில் பேசிய பெண், அட்வான்ஸ் தொகையை சங்கிரியிடம் கொடுத்துவிடுங்கள். ஒருமாதத்தில் குவாரியை எடுத்து தகுகிறோம் என்றார். பணத்தை சங்கரியிடம் கொடுத்து சரவணன் சென்றார்.

இப்படி பல தவணைகளில் பலரிடம் கடன் பெற்று சரவணன் மொத்தம் ரூ.6.80 கோடி கொடுத்த நிலையில் மோசடி செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: பழனி கோவில் கொடுத்த பரபரப்பு புகார் : இயக்குநர் மோகன் ஜி கைதை தொடர்ந்து சிக்கிய பாஜக பிரமுகர்!

கடன் பிரச்னையால் தற்கொலைக்கும் முயன்றார். பணத்தை கேட்டபோது மிரட்டப்பட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார்.

அதில், மாயத்தேவன் அ.தி.மு.க., கவுன்சிலர் எனக்குறிப்பிட்டுள்ளார். மாயத்தேவன் செல்லுார் அகிம்சாபுரம் கவுன்சிலராக வார்டு உள்ளார். இதைதொடர்ந்து சங்கிரி, மாயத்தேவன் உட்பட 3 பேர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 137

    0

    0