திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே தனியார் நிறுவனம் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிச்சலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
This website uses cookies.