சரக்கு வாகனம் அரசு பேருந்து மோதி விபத்து : 10 பேர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!
Author: kavin kumar7 February 2022, 4:09 pm
திருப்பூர் : தாராபுரத்தில் சரக்கு வாகனமும் அரசு பேருந்தும் மோதிய விபத்தில்10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேரளாவில் இருந்து சரக்கு ஏற்றி வந்த சரக்கு வாகனமும் மதுரையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து படுகாயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் 4 பேர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.