அடிக்கடி மின்வெட்டு.. நேற்றிரவு முதல் மின்சப்ளை நிறுத்தம்? கொந்தளித்த பொதுமக்கள்.. திடீர் சாலைமறியல்!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 2:52 pm

அடிக்கடி மின்வெட்டு.. நேற்றிரவு முதல் மின்சப்ளை நிறுத்தம்? கொந்தளித்த பொதுமக்கள்.. திடீர் சாலைமறியல்!

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புது நகரில் தொடர்ந்து ஒரு வார காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதும் இரவினில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் என தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பகுதியான வடசென்னை அனல் மின் நிலையம் பகுதியில் அத்திப்பட்டு புதுநகர் கிராமம் அமைந்துள்ளதால் அப்பகுதியிலேயே மின்சாரம் துண்டிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் அந்த கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வடசென்னை அனல் மின் நிலையம்,காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகங்களுக்கு செல்லும் வாகனங்களும் எண்ணூர் பகுதிக்கு செல்லும் வாகனங்களும் மறுபக்கம் மீஞ்சூர் திருவெற்றியூர் பொன்னேரிக்கு செல்லும் வாகனங்களும் வரிசையாக நின்றுள்ளன. இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உயிரிழந்த ஜெயக்குமார் வாயில் இருந்து கிடைத்த தடயம்.. காட்டிக் கொடுத்த மாட்டு கொட்டகை : அடுத்தடுத்து பரபரப்பு!

அரசு துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!