கூட்டணிக்குள் உரசல்? தமிழகத்தை போல புதுச்சேரி பாஜக எடுத்த அதிரடி முடிவு : கட்சியை வலுப்படுத்த வியூகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 மார்ச் 2022, 6:49 மணி
NR Cong Vs BJP - Updatenews360
Quick Share

புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன், புதுச்சேரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி மற்றும் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிவித்ததாகவும் மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அதிகப்படியான இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த போது பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதாகவும் அதேபோல் சட்டமன்ற கூட்டணி வேறு, உள்ளாட்சி தேர்தல் வேறு என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும் 5 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார். (என்.ஆர்.காங்கிரஸ், பாஜக). உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து தேசிய தலைமையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 1260

    0

    0