இறப்பிலும் ‘இணைந்த கைகள்’… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2023, 6:20 pm

இறப்பிலும் ‘இணைந்த கைகள்’… நண்பர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த உயிர் நண்பன்!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது உயிர்த் தோழன் ராமலிங்கம். இவர்கள் இருவரும் பால்ய காலம் முதல் நண்பர்களாக இருந்துள்ளனர்.

80 வயதான சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி இரண்டு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், 82 வயதாகும் ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் 2 மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகேயுள்ள நாலாம் தெருவிலும், ராமலிங்கமும் அதே பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருமே ஒன்றாகப் பள்ளியில் படிப்பை முடித்து, நாகையில் ஒரே அறையில் தங்கி பாலிடெக்னிக் படிப்பு முடித்தனர்.

பாமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் இருவரும் வேலைக்குச் சேர்ந்து ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர்.

இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் இருவரும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிவராமகிருஷ்ணன் உடல்நலம் பாதிப்படைந்து உயிரிழந்த தகவலைக் கேட்ட, அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ராமலிங்கமும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தினாலும் மறுபுறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?