ஓரினச்சேர்க்கைக்கு அடிமை.. GAY ஆப் மூலம் கிடைத்த நட்பு.. நம்பிச் சென்ற அரசு ஊழியருக்கு நடுக்காட்டில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 8:23 pm

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஒருவர் குலசேகரம் ரப்பர் கழகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் இவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி அருகில் நான்கு வழி சாலைக்கு அழைத்து சென்றார்.

அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மேலும் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அரசு ஊழியர் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், பவுள மோதிரம் மற்றும் ரூ.32,000 ஆகியவற்றை பறித்தனர்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அரசு ஊழியர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதனபேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஆபாச செயலி மூலம் நபர்களை வரவழைத்து பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அரசு ஊழியரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது.களக்காட்டை சேர்ந்த சரவணன் (வயது 31) என்பது தெரியவந்தது.

அரசு ஊழியரை ஓரினச்சேர்க்கைக்கு செயலி மூலம் தொடர்பு கொண்டு அழைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தார், அதனை தொடர்ந்து போலீசார் சரவணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சரவணன் மீது ஏற்கனவே இதுபோல் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. சரவணனுடன் சேர்த்து அரசு ஊழியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிவா, மணி என்பதும் தெரிய வந்துள்ளது.

போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சரவணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த ஆபாச செயலில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது இது குறித்து சைபர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Tamil actress Rambha comeback ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!
  • Views: - 259

    0

    0