இனி இனிஷியலும் தமிழில் தான்… கையொப்பமும் தமிழில் தான் : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 9:22 am

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் இனிஷியல் மற்றும் பெயரைத் தமிழில் தான் எழுத வேண்டும்.

இதுபோல், அரசு விழா, சுற்றறிக்கைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். இதை முதன்மை கல்வி அலுவலர்கள், தங்களது பகுதி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கையொப்பத்தையும் தமிழில் இட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 487

    0

    0