தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை.. 30 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சென்ற முதியவர் : காத்திருந்த TWIST!
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய இலங்கை இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகுமூலம் புறப்பட்டு தலைமன்னார் சென்றடைந்தனர்.
அங்கிருந்து இன்று காலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்த தொடங்கினர்.
அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.
மேலும் படிக்க: மத உணர்வுகளை தூண்டுவதா..இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதா : PM மோடிக்கு எதிராக சீறிய EPS!!
கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.