வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (28). இவர் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக இருந்து வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30க்கும் அதிகமான நபர்களிடமிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்து இருக்கிறார்.
தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை.
நேற்று முன்தினம் ifs நிதி நிறுவன அலுவலகம் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனை நடந்த நிலையில், இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜென்ட் வினோத்குமாரிடம் தொடர்ந்து கேட்டுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்ட தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கடிதத்தில் நிதி நிறுவன இயக்குனர்கள் லட்சுமி நாராயணன் ,ஜனார்த்தனன் மற்றும் மோகன் பாபு, சுந்தரம் ஆகியோர் இயக்கும் நிறுவனத்தில் பணம் செலுத்தியதாகவும், காவல்துறை அவர்களை கண்டுபிடித்து என் மூலம் பணம் செலுத்திய இவர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்னை நம்பியவர்களுக்கு என் முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். நான் முதலீடு செய்த பணத்திற்கு அனைத்து ஆவணங்களும் என்னுடைய இன்டர்நெட் பேங்கில் உள்ளது. முதலீடு செய்தவர்கள் நிறுவனத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள் என அந்த கடிதத்தில் உள்ளது.
மேலும், வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதும், ஏற்கனவே நிதி நிறுவன இயக்குனர் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.