இறுதிச்சடங்குகளுக்கு இனி முழு அரசு மரியாதை.. முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு : ரிப்ளை கொடுத்த அன்புமணி!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸில் பதிவிட்ட அவர், உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது! தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது பாராட்டப்பட வேண்டிய மிகச்சிறப்பான நடவடிக்கை ஆகும். தன் உறுப்புகளை கொடையாக வழங்கி, பல உயிர்களைக் காக்கும் ஈகியர்களுக்கு இதை விட சிறப்பான மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளிக்க முடியாது.
சென்னை அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மாணவர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை, மருத்துவர்களான அவரது பெற்றோர்கள் கொடையாக வழங்கியதன் காரணமாகவே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்பட்டது.
அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நான் ஹிதேந்திரனின் பெற்றோரை பாராட்டியதுடன், தேசிய உடல் உறுப்பு தானத் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன்.
அதன் பயனாக உடல் உறுப்பு தானம் என்பது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பை தானமாக பெறுவதில் பல குறைகள் இருப்பதாக இப்போதும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்த குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.
அனைத்து உடல் உறுப்பு தானங்களும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்; ஏழைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் கடந்து உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
உடல் உறுப்புக் கொடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக உறுப்புக் கொடை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், தமிழ்நாட்டில் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்ட செப்டம்பர் 23-ஆம் நாளை தமிழ்நாடு உடல் உறுப்புக் கொடை நாளாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் அமீர் மற்றும் பாவ்னி. பிக் பாஸ் நிகழ்ச்சியில்…
நான் காலி… “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் 5 சீசனில் பாப்புலரானவர் பூஜா வெங்கட். டாப் 5 லிஸ்டில் வந்த அவர், கடைசியில்…
சுந்தர் சி-வடிவேலு காம்போ கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
பகல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். எந்த மதம் என கேட்டு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய…
திமிர் பிடித்தவர் வடிவேலு படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் திமிராக நடந்துகொள்வார் எனவும் தன்னுடன் நடிக்கும் ஜூனியர் காமெடி நடிகர்களை மரியாதை…
This website uses cookies.