உயிரை காவு வாங்கிய உல்லாசம்.. 43 வயது பெண்.. 27 வயது இளைஞர் : கள்ளக்காதலால் அரங்கேறிய பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 2:15 pm

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பவன் யாதவ். திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் தனது சகோதரருடன் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதே போல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரி. இவரும் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் தங்கி டிரைவராக பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் உபேந்தரதாரி மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவிற்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பக்கத்து வீடு என்பதால் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. பவன் யாதவ் அடிக்கடி சித்ராதேவியை சந்தித்து தனது இச்சையை தீர்த்து கொள்வார்.

இந்த விஷயம் அக்கம்பக்கத்தினரிடம் தீயாய் பரவ, சித்ராதேவி கணவர் உபேந்தரதாரிக்கும் தெரியவந்தது. இதனிடையே நேற்று இரவு பவன் யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்தரதாரி , இதுகுறித்து பவன் யாதவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரடைந்த உபேந்தரதாரி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவை தலை , கை என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை அருகில் இருப்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் தப்பி சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்தரதாரியை தேடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 918

    0

    0