காதல் வலை வீசி லாட்ஜில் இளம்பெண்ணுடன் உல்லாசம் : புகைப்படத்தை காட்டி மிரட்டல்… இளைஞர் கைது.. விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2022, 3:30 pm

கோவை : இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்த புகைப்படத்த காட்டி பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண், அதே பகுதி உள்ள தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம்.

அப்போது பஸ் டிரைவர் அப்துல் ஹமீது (வயது 26) என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு ஜாலியாக சென்று வந்துள்ளனர்.

தொடர்ந்து அப்துல்ஹமீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை உக்கடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படத்தை அப்துல் ஹமீது செல்போனில் எடுத்துள்ளார். தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்துல் ஹமீதிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். பின்னர் அவர் குறித்து விசாரித்தபோது அப்துல் ஹமீது ஏற்கனவே திருமணமானவர் என்றும் அதனை மறைத்து தன்னுடன் பழகி ஏமாற்றியது தெரிய வந்தது.

இதுகுறித்து இளம்பெண் அப்துல் ஹமீதிடம் கேட்டபோது அவர், நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கோவை செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த அப்துல் ஹமீதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!