தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..! 5 மாவட்டங்களில் பூஜ்ஜியம் பாதிப்பு…
Author: kavin kumar26 February 2022, 8:37 pm
சென்னை: தமிழகத்தில் இன்று 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரு நாள் பாதிப்பு 618 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 480 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,002 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,03,402 ஆக உள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 126 பேருக்கும், கோவையில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 55 பேருக்கும், ஈரோட்டில் 18 பேருக்கும், திருப்பூரில் 14 பேருக்கும், சேலத்தில் 13 பேருக்கும், திருவள்ளூரில் 20 பேருக்கும், திருச்சியில் 13 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் புதிய தொற்று எதுவும் பதிவாக வில்லை.