வசமாக சிக்கிய ஜி ஸ்கொயர்… 6 நாள் வருமான வரிசோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2023, 1:19 pm

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் ஆறு நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள், ஐந்து செல்போன்கள் மற்றும் 12 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 24 ஆம் தேதி அதிரடி சோதனையை தொடங்கினர்.

அதில் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுவினர் கடந்த ஆறு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

பாதுகாப்பிற்காக மத்திய ரிசர்வ் போலீசார் உடன் நடத்தப்பட்ட இந்த சோதனை முடிவடைந்துள்ளது. இதனிடையே ஆறு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள், ஐந்து செல்போன்கள் மற்றும் 12 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0