தோட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்.. பிடிக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : பழனியில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 6:54 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி தனஞ்ஜெயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கு இருந்த பலர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி உள்ளனர். அப்போது எட்டு பேரை பிடித்த போது போலிசார் மீது கற்களை வீசி சிலர் எரிந்து விட்டு தப்பி ஓடினர் . இதில் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது இதில் எட்டு பேர் கைது செய்யப்பட்டும் தப்பி ஓடிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களையும், சூதாட்ட சீட்டுகளையும் கைபற்றியும் , போலீஸாரை தாக்க முன்றவர் மீது அரசு பணியை தடுத்த வழக்கும் பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூதாட்டம் தொடர்பாக பிடிக்க சென்ற நபர்கள் நபர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்க முயன்ற சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 300

    0

    0