சென்னையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு ; கிரேன் மூலமாக கடலில் விசர்ஜனம்…!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 4:55 pm

சென்னை காசிமேடு திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வருகிறது

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வீடுகளில் பூஜை செய்த விநாயகரை குடும்பம் குடும்பமாக வந்து கடலில் கரைத்தனர் கடற்கரை பகுதியில் ஏராள மக்கள் கூட்டம்

காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு விநாயகர் சிலைகளை கொண்டு வந்து கரைக்கின்றனர். இதில் எண்ணூர் தாழங்குப்பத்தில் 24 சிலைகளும், எண்ணூர் பகுதியில் 60 சிலைகளும், பாப்புலர் எடைமேடையில் 21 சிலைகளும், காசிமேட்டில் 157 சிலைகளும் மொத்தம் 262 சிலைகளும் கரைக்கப்பட்டு வருகிறது.

இது மட்டும் அல்லாமல் பூக்கடை வண்ணாரப்பேட்டை மற்றும் புலியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காசிமேடு கடற்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலைகள் அனைத்தும் திருவெற்றியூர் எண்ணூர் மற்றும் ஆர் கே நகர் தண்டையார்பேட்டை மற்றும் காசிமேடு பகுதிக்கு உட்பட்ட சிலைகள், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டத்தினால் விநாயகர் சதுர்த்தி விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படாத நிலையில், இந்த வருடம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று மதியம் முதல் பெரிய சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாகவும் மற்றும் ஆரவாரத்துடன் மேளதாள உடன் உற்சாகத்துடன் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வருகின்றன கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை கிரேன் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் சிலைகளை கரைக்கின்றனர்

இதனால், கடற்கரை பகுதி மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், விநாயகரை கடலில் கரைத்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி செல்கின்றனர்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 421

    0

    0