விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்.. கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு : ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு… வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 10:12 pm

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஒவ்வொரு சிலையின் நகர்வையும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்க ஏற்பாடு ஊர்வலத்தில் பிரச்சனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 976 விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக சென்று கரைக்கப்பட உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு  மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஊர்வலத்தில் பிரச்சனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 1500 காவலர்கள், 221 பயிற்சி காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 45 இடங்களில் 170 சிசிடிவி கேமிரா, 4 டிரோன்கள், 10 வீடியோ கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

அதேபோன்று வேலூர் நகரத்தில் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் ஜி.பிஸ்.எஸ் மூலம், ஜியோ கூகுள் மேப் டிராகிங் மூலமாகவும் சிலையின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோன்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்ட  60 நபர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரியில் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கூறினார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!