ஸ்வீட் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல்… பட்டப்பகலில் அட்டூழியம் : ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 4:55 pm

ஸ்வீட் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல்… பட்டப்பகலில் அட்டூழியம் : ஷாக் சிசிடிவி காட்சி!

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கத்தியை காட்டி இனிப்பக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டி கொலை செய்து விடுவேன்.

காவல் நிலையத்திற்கு சென்றாலும் விடமாட்டேன் வழக்கு கொடுத்தால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று மிரட்டி பணம் பறித்து சென்றனர்.

அப்போது அருகில் இருந்த ஒரு நபர் ஓட்டம் எடுத்த நிலையில் மற்றொருவர் கேள்வி கேட்டபோது கத்தியை தூக்கிக்கொண்டு அவரையும் வெட்டப் பாய்ந்த கும்பலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து மப்பேடு போலீசார் கட்சி முனையில் மிரட்டி பணம் பறித்துச் சென்ற மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

இனிப்பக உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பலை பிடிக்க மப்பேடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!