வடமாநில இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கூட்டு பாலியல் பலாத்காரம் : திருப்பூரில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2023, 1:55 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பைரவா (வயது 22) என்ற வாலிபரும், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த முகந்தி சோனா என்ற இளம்பெண்ணும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவிநாசி பகுதியில் கட்டிட வேலை இருப்பதாகவும் அங்கு அதிக சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய முகந்தி சோனா அங்கு வேலைக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஆகாஷ் பைரவா முகந்தி சோனாவை அவிநாசியில் தங்கியுள்ள தனது நண்பர் விரேந்திர் மீனா (23) என்பவர் அறைக்கு அழைத்து சென்றதாக கூறபடுகின்றது.

அங்கு நண்பர்கள் இருவரும் மது அருந்தி விட்டு போதையில் முகந்தி சோனாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஆகாஷ் பைரவா முகந்தி சோனாவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவிநாசியிலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

திருப்பூர் சாலையில் மிகுந்த சோர்வுடன் இருந்த முகந்தி சோனா மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் முகந்தி சோனா அளித்த புகாரின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பைரவா மற்றும் அவரது நண்பர் விரேந்தர் மீனா ஆகியோரை கைது செய்த பல்லடம் மகளிர் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 362

    0

    0