சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரி.. பல்கலை வளாகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி?

Author: Hariharasudhan
15 January 2025, 11:24 am

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பல் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியின் காலாப்பட்டில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்கலைக்கழக விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். மேலும், இந்த மாணவி அதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவுக் கட்டிடத்தின் பின்புறம் தனியாக பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே, இதனை தட்டிக்கேட்ட மாணவரை, அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற மாணவி கீழே விழுந்துள்ளார்.

gang sexual assault attempt in Puducherry Technological University

தொடர்ந்து, கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன அக்கும்பல், மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து, காயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.

இதையும் படிங்க: இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

மேலும், இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவி புகார் அளித்துள்ளார். அதேநேரம், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவர், பல்கலையின் தற்காலிக ஊழியர் என்பது, மற்ற இருவரில் ஒருவர் காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

எனவே, இதுகுறித்து போலீசார் உடனடியாக விசாரணை, நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…
  • Leave a Reply