இரவு நேரத்தில் டார்ச் லைட் அடித்து அந்த தொழிலுக்கு அழைப்பது போல லாரிகளை நிறுத்தி வழிப்பறி.. சிக்கிய கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 10:35 am

கோவை நவக்கரை நந்தி கோவில் அருகே கேரளாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் லாரிகளை டார்ச் லைட் அடித்து வழிமறித்து லாரி ஓட்டுனர்களை தாக்கி வழிப்பறி செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார்கள் வந்து உள்ளன.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து ரோந்து பணி மற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த கும்பலை மடக்கி பிடித்த கேரளா – தமிழக எல்லை அருகில் உள்ள கந்தே கவுண்டன் சாவடி காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவை கந்தேகவுண்டன் சாவடி பகுதியைச் சேர்ந்த சபரீஷ், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கருவாச்சி (எ) குரு பிரகாஷ், உடுமலைப் பகுதியைச் சேர்ந்த சூர்யா, நாகராஜ் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடியன் (எ) சிவா ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் படிக்க: திடீரென சரிந்து விழுந்த பிரச்சார மேடை… அடுத்தடுத்து ஆட்டம் கண்ட ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ!!

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழ் திரைப்படங்களில் வருவது போன்று டார்ச் லைட் அடித்து லாரிகளை வழிமறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu