நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் செல்போன் பறிப்பு : இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…

Author: kavin kumar
28 February 2022, 5:15 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி நகர பகுதியில் உள்ளது மிஷின் வீதி. வர்தகங்கள் மட்டும் அதிக அளவில் கடைகள் உள்ள இந்த வீதியில் அதிக அளவில் நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் வைத்திருப்பவர்கள் இரவில் தங்கள் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை தார்பாய் மூலம் மூடிவிட்டு அருகில் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து நடைபாதையில் உறங்கி கொண்டிருந்த நடைபாதை வியாபாரியிடம் இருந்து செல்போனை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

செல்போன் பறிப்பு தொடர்பாக அந்த வியாபாரி காவல் துறையினரிடம் புகார் கொடுத்து உள்ளதாகவும், இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1643

    0

    0