“கன்னிப்பெண்களுக்கு நடுவே வைரமுத்து” இந்த வயசுல இப்படியா.? விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!
Author: Rajesh3 May 2022, 5:52 pm
தமிழ் திரையுலகில் முன்னணி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் பாபி சின்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு தடை உடை என்று பெயர் வைத்தேன், படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தேன், கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள். சின்ன சின்ன கொண்டாட்டங்களை வாழ்க்கை என பதிவிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படம் அப்படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு மத்தியில் வைரமுத்து நிற்பதைப் போன்று உள்ளது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை டேக் செய்த இசையமைப்பாளர் கங்கை அமரன் “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே” என கமெண்ட் செய்துள்ளார்.
கங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் .. கண்ணன் நடுவினிலே !!!! https://t.co/sMe6sO0Lpf
— [email protected] (@gangaiamaren) May 2, 2022
அவரின் இந்த கமெண்ட்ஸ் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது வருகிறது. இதனிடையே, பாடகி சின்மயி மீடு விவகாரத்தில் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இந்த நிலையில் கங்கை அமரன், வைரமுத்துவை இப்படி கிண்டல் செய்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விமர்சனத்தை அதிலும் பொது வெளியில் இப்படியாக விமர்சனத்தை நிச்சயம் வைரமுத்து விரும்ப மாட்டார் என்று கூறி வருகின்றனர். மேலும், இந்த வயசுல இது போன்ற கமெண்ட் அவசியமா.? என்று கங்கை அமரனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.