கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2023, 5:50 pm

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த கண்டைனர் லாரியை பாலக்காடு பகுதியை சேர்ந்த நூர்முகமது என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரியில் கிளீனர் ராஜேஷ் உள்ளிட்ட மூன்று பேர் இருந்துள்ளனர்.

இந்த கண்டைனர் லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி காப்புக்காடு அருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கு கார் ஒன்று வைத்துக் கொண்டு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் உதவி கேட்பது போல் லாரியை மறித்துள்ளனர்.

டிரைவர் லாரியை நிறுத்திய போது அந்த கும்பல் டிரைவர் மற்றும் கிளீனரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். அப்போது டிரைவரின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றி வளைத்து நான்கு பேரை பிடித்தனர்.

அப்போது அங்கிருந்து இவர்களுடன் வந்த மூன்று பேர் காரில் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நான்கு பேரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் இருந்ததால் பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் பிடிபட்ட நான்கு பேர் மற்றும் லாரி டிரைவர் நூர்முகமது, கிளீனர் ராஜேஷ் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பிடிப்பட்டவர்கள் லாரியை வழிமறித்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு நோய் ஏற்படுத்தி உள்ளது

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…