குறிவைக்கப்படும் மாணவர்கள்?.. பாக்கெட் பாக்கெட்டாக சப்ளை செய்யப்படும் கஞ்சா சாக்லேட்..!

Author: Vignesh
26 August 2024, 6:27 pm

கோவையில் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைத்து இருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்து இருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் சமல் (40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 1,14,400/- மதிப்பு உள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Samantha dating Raj Nidimoru அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!