காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 6:50 pm

காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது கதிர்வேல் நகர் பகுதியில் காரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கதிர்வேல் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

மணிகண்டன் செல்போன் மூலம் கஞ்சா வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு காரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

இதைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் மணிகண்டனிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய ஆறு செல்போன்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 8000 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

மேலும் இவரது செல்போன் மூலம் கஞ்சா விற்பனை எவ்வாறு செய்து வருகிறார் வெளி மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா கும்பலுடன் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!