கஞ்சா போதையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதி கேட்டவருக்கு கொலை மிரட்டல் : பரபரப்பை கிளப்பிய மீஞ்சூர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 10:04 pm

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு
ஜுவாரி தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் ராமு.

இவரது மகன் விமலை கஞ்சா போதையில் கும்பல் ஒன்று சரமாரியாக கை கால் கழுத்து தலை என வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்ததால் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு விமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் விமலை வெட்டிய அதே கும்பல் வீட்டில் இருந்த அவரது தந்தை ராமுவை வெட்ட முயன்றுள்ளது.

அவர் பயந்து கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டதால் அங்கு வீட்டில் கத்தியுடன் வந்தவர்களை பார்த்து வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் அவர்களை பார்த்து குறைத்துள்ளது.

இதனால் ஆத்திரத்தில் கத்தியுடன் வந்த கும்பல் நாயை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. விமலை வெட்டிய கும்பலும் நாயை கொலை செய்த நபர்களும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் பிரபாகரன் ரோகித் என்பதும் அவர்கள் விமலின் நண்பர்கள் என்பதால் விமலின் தந்தை ராமு ஆத்திரமடைந்து அவர்கள் மூன்று பேரின் வீட்டிற்கு சென்று அவர்களின் பெற்றோரை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் கஞ்சா மற்றும் மது போதையில் ராமுவை அவரது வீட்டிற்கு சென்று வெட்டி கொல்ல முயன்ற போது அங்கு இருந்த நாயை கொடூரமாக வெட்டி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது .

விமலை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது மற்றும் நாயை வெட்டி கொன்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் போலீஸா தப்பியோடி தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் கைது செய்து பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

கஞ்சா மற்றும் மது போதையில் நண்பரை வெட்டிக் கொல்ல முயன்று அதனை கண்டித்த நண்பனின் தந்தையையும் வெட்டிக்கொலை செய்ய முயற்சித்த நபர்கள் நாயை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 473

    0

    0