குவியல் குவியலாக கிடந்த கஞ்சா.. மதிப்பு மட்டும் இத்தனை லட்சமா : போலீசார் வைத்த ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 ஏப்ரல் 2023, 9:16 மணி
Ganja - Updatenews360
Quick Share

கோவை வடவள்ளி பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் தோறும் காவல்துறையினர் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா வைத்திருக்கும் நபர்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வடவள்ளி பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் வடவள்ளி அஜ்ஜனூர் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது நான்கு பேர் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 8.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நால்வரில் மூன்று பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்த, மனோஜ் குமார்(33), மார்கண்டன்(33), தினேஷ்(27) மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்(31) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டாலோ பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் whatsapp எண் 7708100100 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 334

    0

    0