வீட்டுக்குள் 8 அடி நீளத்தில் கஞ்சா செடி : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 8:07 pm

திண்டுக்கல் அருகே வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் வேடப்பட்டியை அடுத்த கண்ணார்பட்டி பிரிவு அருகே வீட்டில் பிரபு (வயது 30) கஞ்சா செடி வளர்த்தார். இவரை தாலுகா காவல் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 8 அடி நீள கஞ்சா செடியை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். மலைப்பகுதியில் கெட்டியான மரம் செடி கொடிகளுக்கு நடுவே செடி வளர்த்து வியாபாரம் செய்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறோம் .

ஆனால் வீட்டுக்குள்ளே ஒருவர் கஞ்சா செடி வளர்த்தார் என்பது புதுமையாகவும் புதிராகவும் உள்ளது. இது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 477

    0

    0