தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியில் கஞ்சா விற்பனை அமோகம் : விசாரணையில் சிக்கிய 21 வயது இளைஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 10:06 pm

ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து தடாகம் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த இளைஞர் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்ட நபர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 21) என்பதும், இவர் ஜேசிபி ஓட்டுனராக இருந்து கொண்டு கேரளாவில் இருந்து கஞ்சாவை விற்பனைக்கு வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதை மோகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!