VPN மூலம் மிகப்பெரிய நெட்வொர்க்.. பாங்காங்கில் இருந்து போதைப்பொருள் வந்தது எப்படி? மேலும் இருவர் கைது!
Author: Hariharasudhan11 December 2024, 11:16 am
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான் சிக்கிய கஞ்சா வழக்கில், போதைப் பொருட்களை பாங்காங்கில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை: சமீபத்தில், சென்னை அடுத்த முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர், சென்னை மண்ணடியைச் சேர்ந்த 2 பேர் இதே வழக்கில் போலீசாரிடம் சிக்கினர். அதேபோல், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்களையும் இதே வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், இந்த மாணவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்வதைத் தொடங்கினர். அப்போது பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) மொபைல் நம்பரும் இருந்து உள்ளது. இதனையடுத்து, அலிகான் துக்ளைக்கை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: விஜய் படத்தில் கமிட் ஆனதால் அடித்தது லக்… பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!
இதனையடுத்து, மேலும் 3 பேர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இவ்வாறு விலை உயர்ந்த கஞ்சா தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும், மன்சூர் அலிகானின் மகன் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு, அதனை வாங்கி சப்ளை செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாங்காங்கில் இருந்து கடத்தல்: இவ்வாறு மன்சூர் அலிகான் மகன், அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் டார்க்வெப், விபிஎன் மூலம் பாங்காக்கில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, சென்னைக்கு உயர்தர கஞ்சாவை வரவழைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், பாங்காக்கில் இருந்து கப்பல் மற்றும் விமானம் மூலம் கூரியர் (Courier) வழியாக கஞ்சாவை வாங்கி உள்ளனர். ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கிய ஒரு கிராம் கஞ்சாவை, அந்தக் கும்பல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.