மாவட்டம் முழுவதும் கஞ்சா சப்ளை… வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது… 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 7:36 pm

மாவட்டம் முழுவதும் கஞ்சா சப்ளை… வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது… 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஒடிசா மாநிலம் சிங்கிபோர் கிராமத்தை சார்ந்த பிந்து நாயக் என்பதும் இவர் ஒடிசாவிலிருந்து ரயில் மூலமாக வந்து விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் கையில் 5 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து பிந்து நாயக்கிடம் போலீசார் விசாரணை செய்ததில் மாம்பழப்பட்டு கிராமத்தை சார்ந்த சஞ்சய், கவியரசன், ரஜிபுதீன் ஆகியோர் விழுப்புரத்தின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வாங்கி சென்று சில்லரையாக விற்பனை செய்வது தெரியவரவே பிந்து நாயக் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!