டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : நெஞ்சை பதற வைக்கும் பரபரப்பு வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 2:21 pm

கன்னியாகுமரி : நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டீக்கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை ஒன்றில் கடந்த 17ஆம் தேதி அன்று காலை வடை போட்டு கொண்டு இருக்கும்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது.

இதில் எட்டு பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிற்ச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த காட்சியில், கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பழம்புகள் சிதறி வெளியே வந்த போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிய காட்சியும் ஒரு சிலருக்கு ஆடைகளில் தீ பற்றிய காட்சியும் அதில் உள்ளது.

https://vimeo.com/732689828

மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஏற்கனவே நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1141

    0

    0