கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. தீவிர மீட்புப் பணி.. பள்ளிகளுக்கு விடுமுறை! போக்குவரத்து மாற்றம்!

Author: Hariharasudhan
3 January 2025, 9:11 am

கோவையில் உள்ள மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 500 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அவிநாசி சாலை, அண்ணா மேம்பாலத்தில் இன்று (ஜன.03) அதிகாலை கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாயுக் கசிவு தற்போது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத் துறையினர், போலீசார் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வாயுக்கசி்வு அச்சத்தால், லாரி கவிழ்ந்த 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி, கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை குப்புற கவிழ்ந்தது.

Coimbatore gas tanker lorry accident

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், முதற்கட்டமாக தண்ணீர் ஊற்றி வாயுக்கசிவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!

மேலும், மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து, மாற்றுப் பாதைகளில் வாகனங்களைத் திருப்பிவிடுகின்றனர்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!