பிரபல நடிகையை ஒரு தலையாக காதலித்த கௌதம் மேனன் : ஆள் இருக்குனு தெரிஞ்சதும் சைலண்ட்.. வெளியான உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 4:41 pm

சினிமாவில் ரீல் ஜோடிகளாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தது வாடிக்கையான விஷயம்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நிலைத்து நின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.

அப்படி எத்தனையோ ஜோடிகள் சினிமாவில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்த, பின்னர் விவாகரத்தும் செய்துள்ளனர். குறிப்பாக ஜெமினி – சாவித்ரி, ராமராஜன் – நளினி, ரேவதி – சுரேஷ்மேனன், தற்போது சமந்தா – நாகசைதன்யா என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இப்படி இருக்கையில், தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்று கூறினால் உடனே நினைவுக்கு வருவது சூர்யா ஜோதிகா தம்பதிதான். அழகான காதல், வாழ்க்கை குடும்பம் என செட்டிலாகிவிட்டார்கள்.

ஆனால் தற்போது ஒரு உண்மை வெளியாகியுள்ளது. சூர்யா ஜோதிகா ஜோடியாக நடித்த போதே காதல்வயப்பட்டனர். இந்த விஷயம் வெளியுலகுக்கு தெரிந்தும், இரண்டு பேர் வெளியில் இதை ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் இந்த காதல் உண்மையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் காக்க காக்க படத்தில் நடித்த போது இயக்குநர் கௌதம் மேனன், ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்துள்ளார்.

ஆனால் அதை சொல்லலாம் என நினைக்கும் போதுதான், சூர்யா ஜோதிகா காதலிப்பது அவருக்கு தெரியவர, அந்த விஷயத்தை அப்படியே மறைத்துவிட்டார்.

தான் இயக்கிய படத்தின் போது, சூர்யா ஜோதிகா காதலிப்பது இயக்குநருக்கு தெரிந்துள்ளது. சரி என மனதை தேற்றிக்கொண்டு மறைத்துள்ளார் கௌதம். இந்த தகவல் அப்போது இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது நினைவுகூரத்தக்கது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 533

    0

    0