ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதைமட்டும் தயவு செய்து செய்யாதீங்க.. ‘வெந்து தணிந்தது காடு’ இயக்குனர் வேண்டுகோள்..!

Author: Vignesh
1 October 2022, 1:00 pm

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிய சூப்பர் ஹிட் அடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதைகளத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். திரையரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டடு பேசிய இயக்குனர் கெளதம் மேனன்

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல், ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த பாடலை ஒரேயொரு பெண்ணை மட்டும் வைத்து உருவாக்காமல், ஒரு சிறிய அறையில் 40 ஆண்கள் நடனமாடும்படி பாடலை உருவாக்கினோம்.

மேலும், திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள், 10 – 15 வினாடி காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இது தவறான செயல். ஒரு திரையரங்கிற்கு வரும் ரசிகர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு புகைப்படம் எடுத்து பதிவிடலாம். ஆனால் அதை விடுத்து வீடியோவையே சமூக வலைத்தளத்தில் பதிவிடுக்கின்றனர். ஒரு திரைப்படத்தை எடுக்க எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறுனார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ