மகன்களுக்கு பாலியல் தொல்லை… GAY சகோதரர்களால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2025, 2:32 pm

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 49 மற்றும் 43 வயது சகோதரர்கள். இவர்கள் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டனர். அண்ணன், தம்பி தம்பதியினருக்கு தலா 2 மகன்கள் உள்ளனர்.

சகோதரர்கள் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை செய்தனர். அந்த சமயத்தில் சகோதரர்கள் தங்களின் 12, 7 மற்றும் 6 வயது மகன்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை அறிந்த சிறுவர்களின் தாயார் உடனடியாக அவர்களை அழைத்து கொண்டு இந்தியாவிற்கு திரும்பினர்.

இதையும் படியுங்க: குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர்.. பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி?

இந்த நிலையில் சில மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்த சிறுவர்களின் 2 தந்தையும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு சிறுவர்களின் மற்றொரு சித்தப்பா மற்றும் பாட்டியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

Gay Fathers arrested in pocso

இதுகுறித்து சிறுவர்களின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Gay Fathers Arrest for Sexual Harassment to their sons

இதில் நீதிபதி சிவக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் முதல் மற்றும் 2-வது குற்றவாளிகளான அண்ணன், தம்பிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், 3 மற்றும் 4-வது குற்றவாளியான சித்தப்பா, பாட்டிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணன், தம்பி இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி