தவெக – பாஜக அண்ணாமலை மோதல் நேற்று பூதாகரமாக வெடித்த நிலையில், அதிமுகவின் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழக பாஜகவினர் திமுகவுக்கு எதிராகப் போராடுவது விந்தையாக உள்ளது எனவும், பொதுவெளியில் தங்களை எதிரிகள் போல காட்டிக் கொண்டு புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்திருந்தார்.
இது குறித்து பேசிய அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தினர் பள்ளி மாணவர்கள் போல அரசியல் செய்வதாகவும், விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்கிறார், அவர் Work From அரசியல்வாதி, திமுகவின் பி டீம் தான் தமிழக வெற்றிக் கழகம் என பதிலடி கொடுத்திருந்தார்.
இதனால் அண்ணாமலையை தவெகவினர் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “விஜய் சாரின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர் எதிர்மறையை புறக்கணிப்பவர். அவர் முட்டாள்களுக்கும், கவனத்தைத் தேடும் ஆபாச கேமரா வீடியோகிராஃபர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். விஜய் சாரை அவதூறு செய்ய திமுக முயற்சித்தது.
விஜய் சாரை தனிப்பட்ட முறையில் தாக்க முயன்றது. விஜய் சாரை பற்றி யூடியூபர்களை தவறாகப் பேச வைக்கப்பட்டது திமுக. விவாதங்களின் மூலம் விஜய் சாரை சேதப்படுத்த திமுக முயற்சித்தது. விஜய் சாரை குறைத்து மதிப்பிட அனைத்து அமைச்சர்களையும் அனுப்பியது திமுக.
விஜய் சாரை சமூக ஊடகங்களில் தாக்கியது திமுக. ஆபாச அவதூறு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அனுப்பியது திமுக. பாஜக/திமுக ஆபாச பீரங்கி மேனேஜர் பிட்மலை கவனத்தைத் தேடும் ஒருவரை அனுப்பி, திமுக இப்போது இறுதி முயற்சியை மேற்கொண்டுள்ளது.
விஜய் சார் அனைத்து #Negativity-யையும் புறக்கணிக்கிறார். அவர் திமுகவின் வலையில் விழ மாட்டார். திமுகவின் தொடர்ந்து பயமுறுத்தும் கனவு அதிமுக; திமுகவின் பயம் விஜய் சார். நான் அதிமுகவைச் சேர்ந்த உண்மையான தொண்டர், ஆனால் நான் விஜய் சாரின் தீவிர ரசிகன். நான் அவரை ஆதரிக்கிறேன்.
அவரது நேர்த்தியான அரசியலை நான் ஆதரிக்கிறேன். அரசியலில் பொறுமையும் மரியாதையும் தேவை. சிறந்த கூட்டணி மற்றும் அதே ஆபாச மனநிலை பாஜக மற்றும் திமுகவிற்கும் பொருந்தும். இந்த ஜோடி பொருத்தம் கோபாலபுரம் சொர்க்கத்தில் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நாகசைதன்யா மீது இருந்த கொஞ்ச, நஞ்ச பாசத்தையும் அழித்த சமந்தா.. வைரலாகும் புகைப்படம்!
அவர்களுக்கு பொதுவான ஒற்றுமை உள்ளது, இரண்டும் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்ற கட்சி அல்ல. அரசியல் நாகரிகம் இல்லை. விஜய் சார் மீது முட்டாள்தனமான தாக்குதலுக்கு திமுகவின் அடிமை/பாஜக மேனேஜரை திமுக இறுதியாக அனுப்பியது முற்றிலும் தோல்வியடைந்தது.
பொது மேடையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட பாஜக தலைவர்கள் ஏராளம். பெண்களின் இடுப்பு கிள்ளப்பட்டது என்று பாருங்கள். திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரின் இடுப்பு கிள்ளப்பட்டது. மறக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.