‘கடவுள்‌ உங்களை பார்த்துக்கொள்வார்.. அற்பனுக்கு வாழ்வு வந்தால்’… போற போக்கில் அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 10:07 pm

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் அண்மையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அண்ணாமலையையும், பாஜக நிர்வாகிகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், வேறு கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் இணைய தயார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, காயத்ரி ரகுராமை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து தமிழக பாஜக இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தன்னை கட்சியில் இருந்து நீக்கம் செய்ததால் கடுப்பான காயத்ரி ரகுராம், கொந்தளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :- என்‌ தொழிலைக்‌ கெடுத்ததற்கு நன்றி, என்‌ பெயரைக்‌ கெடுத்ததற்கு நன்றி, என்‌ பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப்‌ பங்கம்‌ செய்ததற்கு நன்றி, என்‌ 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும்‌ பணத்தை எடுத்துக்‌ கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும்‌ பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால்‌ திரும்பக்‌ கொண்டுவர முடியாத இளமைக்‌ காலத்தை பறித்ததற்கு நன்றி, என்‌ தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம்‌ செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.

கடவுள்‌ உங்களை பார்த்துக்கொள்வார்‌. நீங்கள்‌ அனைவரும்‌ என்னிடம்‌ செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள்‌ உங்களுக்கு பதில்‌ சொல்வார்கள்‌. நான்‌ என்‌ தர்மத்தை நிலைநாட்டுவேன்‌. விரைவில்‌ களத்தில்‌ சந்திப்போம்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Annamalai - Updatenews360

இந்த அறிக்கையோடு, தனது டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் :- ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன்.

அரசியல் ஜோக்கர் Z பிரிவு பாதுகாப்பு மக்களின் பணத்தில் இருந்து. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான்,” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி